வாழ்கை வாழ்வதற்கே

குறிபிட்ட ஒரு மணி நேரம் மட்டும் ஆசிரமம் அருகில் உள்ள மைதானத்தில் விளையாடிவிட்டு வரலாம் .அங்கு இருக்கும் பெற்றோர் தங்கள் குழந்தையுடன் வருவதை கண்டு என் மனதில் ஏனோ ஒரு ஏக்கம் உண்டாகும்.

அன்றும் அப்பிடியே , காலையில் நன்றாக மழை பெய்து இருந்தது . என் நண்பர்கள் அனைவரும் விளையாடி கொண்டு இருந்தனர் . எனக்கு விளையட மனமில்லை .ஸ்டோன் பெஞ்சில் அமர்ந்து ஏதோ சிந்தித்து கொண்டு இருந்தேன் . " ஜோ !" என்று யாரோ அழைப்பது போல் இருந்தது .திரும்பி பார்த்தால் 50 வயது மதிக்கதக்க மனிதர் அமர்ந்து கொண்டு இருந்தார் . அவர் யார் என்று எனக்கு தெரியவில்லை.

அவர் என் அருகில் வந்து " நீ ஜோ தானே ?" என்று கேட்டார் . "ஆம் நீங்கள் ?" . "நான் தாடிக்காரன் !". பெயர் விநோதமாக இருந்தது. "என் பெயர் எவ்வாறு உங்களுக்கு தெரியும்?" என்று கேட்டேன். "உன் பெற்றோர் யார் என்றும் எனக்கு தெரியும் ! " அவர் கூற என் கண்ணில் நீர் வர ஆரம்பித்தது "உண்மையாகவா ?" ,"ஆம், அனால் இங்கு இல்லை !" என்றார் ."நான் அவர்களை காண முடியுமா ?" . "முடியும் ! நாளை காலை இதே இடத்தில் வந்து நில்,நான் உன்னை அழைத்து செல்கிறேன்" என்றார் ."நாளை பார்போம்" என்று அவர் கூறியப்படியே மஞ்சள் நிற காரில் ஏறினார் .கார் அந்த இடத்தை விட்டு நகன்றது
.
காலை வந்தது, மழை நன்றாக பெய்து கொண்டு இருந்தது . " தாடிக்காரன் வருவாரா?" மிகுந்த ஆவலுடன் காத்து கொண்டு இருந்தேன் . மஞ்சள் கார் மைதானத்தின் வாசலில் நின்றது. .தாடிக்காரன் " வேகமாக ஓடி வா!" என்பது போல் தன கையை அசைத்தார்.காரில் ஏறினேன் “தயாரா ?” " தயார் " என்று நான் கூற கார் வேகமாக கிளம்பியது .தலை சுற்றியது நான் மயங்கினேன்.
கண் திறந்து பார்த்தால் புதிய உலகம் என் முன் காட்சி அளித்தது. பல ஆச்சிரியமான விஷயங்கள் அங்கு நடந்து கொண்டு இருந்தன . பெண்கள் அனைவரும் எல்லையை பாதுகாத்து கொண்டு இருந்தனர் . பெட்டிக்கடை தொடங்கி அனைத்து இடத்திலும் பெண்களே காணப்பட்டனர்.

"இங்க ஆண்களே இல்லையே !" என்று நான் கேட்டதற்கு “எல்லோரும் வீட்டையும் சமையலறையும் கவனித்துகொண்டு இருக்கிறார்கள்” என்றார். போகும் வழியிலேய ஒரு ஆண் காரின் நடுவில் விழுந்தான் . அவனை சரமாரியாக ஒரு பெண் அடிக்க தொடங்கினாள் . "என்ன நடக்கிறது ?" ஒன்றும் புரியாமல் கேட்டதற்கு ,"நியூடனின் மூன்றாம் விதி ! " என்றார் சிரித்துக்கொண்டே. “ஆண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் !” என்று வீதியில் ஆர்பாட்டமும் நடந்துகொண்டு இருந்தது.

குழந்தையை ஆண்கள் பள்ளிக்கு அழைத்து சென்று கொண்டு இருந்தனர்."அப்பா சொன்னேன்ல சமத்தா இருக்கனும்"என்று சொல்லி பள்ளிக்கு அனுப்பி கொண்டு இருந்தனர்.
கார் ஓர் இடத்தில் மெதுவாக நின்றது."அங்கே பார் !"என்றார் தாடிக்காரன். ஆணும் பெண்ணும் சந்தோசமாக பேசி கொண்டு இருந்தார்கள். “இறுதிப்போரில் கொல்லப்பட்ட உன் தாய் தந்தை இவர்களே, இவர்கள் யார் ? இவர்கள் வாழ்வதின் நோக்கம் என்ன ? “என்பது இவர்களுக்கு தெரியாது ஆனாலும் இவர்கள் வாழ்ந்து கொண்டு தான் இருகிறார்கள் என்றார் தாடிக்காரன்.நான் அவர்களயே பார்த்து கொண்டு இருந்தேன் அவர்களிடம் வேதனையோ துக்கமோ தென்படவில்லை. நேரம் ஓடிக்கொண்டே இருந்தது காரின் உள்ளே இருக்கும் என்னை அவர்கள் கண்டுக்கொள்ளவில்லை .

" இவர்களிடம் என்ன புரிந்து கொண்டாய்?" என்று கேட்டார் தாடிக்காரன் ." பிறப்பும் இறப்பும் இரண்டு உலகிற்கும் ஏற்றுமதி இறக்குமதி அதனால் அதை நினைத்து சந்தோசமோ துக்கமோ பட அவசியமில்லை என்பதை இவர்களிடம் புரிந்து கொண்டேன் !” என்றதும் அலாரம் வேகமாக அடித்தது, தூக்கம் கலைய எழுந்தேன்.

முகத்தை கழுவிகொண்ட பிறகு தான் அனைத்தும் கனவு என்று என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. மனதில் இப்போது தாய் தந்தை பற்றிய கவலை ஏனோ இல்லை ."யார் அந்த தாடிக்காரன் ?" என்று யோசித்து கொண்டே கல்லூரிக்கு புறப்பட்டேன்.

எழுதியவர் : பாலாஜி லெனின் (28-Jan-14, 11:59 pm)
பார்வை : 734

மேலே