மதுக்கூடம் மட்டும் அல்ல

மது மது எனச்சொல்லும் சொல்லில்
மயக்கம் விழிக்கிறதோ!
அது அது எனத் துள்ளும் துள்ளில்
ஆசை இழுக்கிறதோ!

ஞானிகள் குழுமும் ஞான சபையோ
நானே அசந்தேனே!
தானாய் உதிர்ந்திடும் தத்துவ மொழியோ!
வீணாய் சிந்தியன`!

சொல்லுக்கும் செயலுக்கும் சொந்தம் பகைக்கும்
சூனியம் மதுதானோ!
மல்லும் மௌனமும் எல்லாம் நானென
வில்லனும் மதுதானோ!

கவிகள் கதைகள் அறிவியல் புதிர்கள்
அவியல் தீஞ்சிடுமே!
பரிவு பாசம் உருகும் நட்பும்
மருகி மாஞ்சிடுமே!

இளமை இந்தியா மறைவினில் ஆடி
வறுமை மறந்திடுமே!
முதுமை கூட இளமை தேடி
மதுவில் பறந்திடுமே!

வேற்றுமை துறந்த ஒற்றுமை மனிதம்
விளையும் கூடமிதோ!
ஆற்றும் காற்றில் தோற்றே ஓடும்
தூற்றும் பாடமிதோ!

மதுவில் தட்டும் அதிர்வில் கொட்டும்
மனதும் திறந்திடுமோ!
அடக்கிய வலிகள் அனைத்தும் கரைந்தும்
அதுவாய் பழகிடுமோ!

மெதுவாய் சுகமாய் பதமாய் கொல்லும்
மதுவே விசந்தானோ!
அதுவாய் இதுவாய் எதுவாய் வெல்லும்
அழிப்பதும் மதுதானோ!

மனிதம் தொலைத்து மனிதம் பேசும்
மதுக்கூடம் மட்டுமல்ல.
முழுதாய் தொலைந்து முடிவைத் தேடும்
மரணக்கூடம் நில்லு!


கொ.பெ.பி.அய்யா.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா. (30-Jan-14, 2:33 am)
பார்வை : 975

மேலே