மாவிலைத் தோரணம்

மாவிலைத் தோரணம்...?

நமது வீட்டிலும் கோயில்களிலும் விஷேச நாட்களில் மாவிலைத் தோரணம் கட்டுவது ஏன்:

நமது வீட்டில் பண்டிகை நாட்களிலும் ஆலயத்தில் திருவிழாக்காலங்களிலும் என்றால் மாவிலைத் தோரணம் கட்டுவது மரபாக உள்ளது.

புதிய மாவிலைகளைப் பறித்து வந்து தோரணம் கட்டுவதற்கு காரணம், மாவிலைக் காம்பில் உள்ள பால்,காற்றில் கலந்து,நாம் சுவாசிக்கும் போது ,

ஒரு கிருமி நாசினியாகச் செயல்பட்டு தந்து ஒருவரிடம் உள்ள நோய்கிருமி மற்றவர்களுக்குப் பரவாமலும் தொற்று நோய் ஏற்படாமலும் தடுக்கிறது.

மேலும், மாவிலையைக் கலசத்தில் வைத்து ,மந்திரம் சொல்லி புரோஷித்துக் கொள்வதற்கும் இதுவே காரணம்.

செவ்வாய்கிழமையும், சனிக்கிழமையும் மாவிலைத் தோரணம் கட்டக்கூடாது என்கிறது சாஸ்திரம்.

கட்டப்பட்ட தோரணத்தைக் காய்ந்து உதிரும் வரை அவிழ்க்கக் கூடாது.

மாவிலைத் தோரண மகிமையை விட மருத்துவ மகிமை அதிகமானது. மாவிலைக்குத் துவர்ப்பு உண்டாவதால் நாடி நரம்புகளையும், தசைநார்களையும் சுருக்கி ரத்தம் வடிதல் முதலியவற்றை நிறுத்தக் கூடிய சக்தி உடையது.

மாந்தளிர் இலைகளைச் சேகரித்து உலர்த்தி இடித்து தூள் செய்து தினமும் காலை நேரத்தில் வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி எடுத்து ஒரு கோப்பை சுத்தநீரில் போட்டுக் கொதித்த பின் ஆறவைத்துக் குடித்து வர சிலதினங்களில் நீரிழிவு வியாதி குணமாகும்.

தொண்டைக் கட்டுக்கு பச்சை மாவிலையைக் கிள்ளி நெருப்பில் போட்டால் புகைவரும்.

அந்தப் புகையை வாயை அகலத் திறந்து பிடித்தால் தொண்டைக் கட்டு நீங்கும்.

எழுதியவர் : முரளிதரன் (30-Jan-14, 8:19 pm)
சேர்த்தது : முரளிதரன்
பார்வை : 146

சிறந்த கட்டுரைகள்

மேலே