பாரதியின் கற்பனைப் பெண் கல்பனா

பாரதியின் கற்பனைப் பெண் கல்பனா>

பாரதியின் கற்பனைப் பெண்
பாரதப்பெண் கல்பனா சாவ்லா
சாரதியாய் சஞ்ச்சரிப்பாள்-ஞாலம்
ஆராதிக்கும் நட்சத்திரமாய்.

பெண்ணின் பெருமையாய்
விண்ணின் அருமையாய்
முன்னை சாதனையாய்-ஒளிர்வாள்
தன்னை நட்சத்திரமாய்.

இன்னை நாளிலே
இந்திய மண்ணிலே
ஒண்ணைப் பிறப்பித்தான்—அந்தப்
பெண்ணை நட்சத்திரமாய்.

விண்ணை அளந்தவளாய்
விந்தை முடித்தவளாய்
விண்ணில் கலந்தவளாய்—அவள்
விளங்குவாள் நட்சத்திரமாய்.

கற்பனையாய் காலத்தால்
கல்பனா மறுவாமல்
விற்பன்னக் கலபனாக்கள்—வாழ்வில்
விளையட்டும் நட்சத்திரங்களாய்.

கொ’பெ`பி`அய்யா`
---------------------------------------------------------------------------
பொருள்:
கல்பனா==கற்பனை
------------------------------------------------------------------------------

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா. (1-Feb-14, 7:50 pm)
பார்வை : 117

மேலே