விட்டு கொடுக்கவே மாட்டாங்க

"நாம போலாம், ரெண்டு பேரும் போலாம், நான் கூட்டிகிட்டு போறேன், நான் வாங்கி தாரேன்" என ஒரு வார்த்தையை "தெரியாத்தனமாக" சொல்லி விட்டு (அம்மாவை தவிர) பின்னர் வேலை பளு காரணமாக சொல்லிய இடத்திற்கு அழைத்து போக முடியாதவர்களுக்கும், சொல்லிய அந்த பொருளை வாங்கி தரமுடியாதவர்களுக்கும் தெரியும்.

தெரியாத்தனமாக சொல்லப்பட்ட அந்த வார்த்தை எவ்வளவு தூரம் அவர்களை தர தரன்னு இழுத்து போயிருக்குமென்று.

நிமிடத்திற்கு பத்தாய் வரும் அலைபேசி அழைப்புகள் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டே இருக்கும், "நீ வா நீ தானே சொன்ன, நானா கேட்டேன், ஒன்னு ஏன் கூட வா, இல்லனா என்ன கொண்டு போய் விட்டுட்டு வா, இப்படி பல அழைப்புகள் வரும், அதுக்கு பேர் பாசம் இல்ல, பிடிவாதம் என்பதை அவர்கள் ஒத்துக் கொள்ளவும் மாட்டார்கள்.

விடாம போன் பண்ணிட்டே இருப்பாங்க. நம்ம செல் போன் கத்திகிட்டே இருக்கும். இதயம் எடுக்க சொன்னாலும், டக்குனு மூளை எச்சரிக்கும். "டேய் எடுக்காத பக்கத்துல ஆள் இருக்கு" காரணம் வேலை, அங்க இருக்க சூழ்நிலை. ஆனால் செல்போனுக்கு வேலை கத்திக் கொண்டு இருப்பது தானே.

ஆட்டோ மூடில் இருந்து விட்டு திடீரென இப்படியான அழைப்புகளை எடுத்து மேனுவல் மூடில் பேசினீர்கள் என்றால் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு உங்களால் ஆட்டோ மூடிற்கு போகவே முடியாது. சொந்தம், பந்தம், நட்பு, குடும்பம், கணவன், மனைவி,பிள்ளை யாரா இருந்தாலும் அந்த இடத்தில் சமாதானத்திற்கு பெயர் கூட சண்டை தான் சார்.

வேலை முடிந்து, வந்த அழைப்பிற்கு ஆர்வமா போன் பண்ணுவோம், அந்த நம்பர் அப்போது தான் அனைத்து வைக்கப் பட்டிருக்கும். இதுக்கு பேர் தான் தெரிஞ்சே செய்யிற தப்பு. அவர்களுக்கு தெரியும் நாம் போன் பண்னுவோமென்று. ஆனா பிடிவாதம் அந்த போன ஆப் பண்ணி வச்சிரும். இல்லனா சும்மாவே இருந்தாலும் போன எடுக்க மாட்டங்க. நாம வேலைய பார்ப்போம், அவங்க வேதன படுத்தி பார்ப்பாங்க...

திரும்ப திரும்ப கூப்பிட்டு பார்த்து வெறுத்து போன இதயம் இத்து போண நான்கு கெட்ட வார்த்தைகளை பேசி விட்டு முனங்கிக் கொண்டே இருக்கும். அவங்க போன் பண்ணி நாம போண எடுக்கலைனா அவங்களுக்கு கோவம் வருது. நாம போன் பண்ணி அவங்க எடுக்கலானாலும் நமக்கும் கோவம் தான் வருது. என்ன செய்ய? பக்கத்தில் இருப்பவர்களிடம் சொல்லி புலம்பி கொண்டிருப்பதை தவிர வேற ஏதும் நமக்கு தெரியாது. திரும்பவும் போன் வரும்.

பழைய குருடி கதவ தொறடி கதை தான் இப்போதும், போனை ஆப் பண்ணி வைத்துவிட்டு, "ஒரு போன் பண்ண கூட உனக்கு தோனலல, நான் எப்டி போனா உனக்கென்ன, நீ ஜாலியா இரு நான் எங்கயாது போய் தொலையிறேன்" டொய்ங் டொய்ங் டொய்ங் அவ்வளவு தான். நாம் புலம்பிக் கொண்டு இருப்பதும், உள்ளுக்குள் போட்டு குழம்பிக் கொண்டிருப்பதும் தான் அவர்களுக்கு ஜாலியாகப் படும்.

வாழ்க்கையில நமக்கு மட்டும் ஏன் இப்டியெல்லாம் நடக்குதுன்னு யார்கிட்டயாச்சும் சொல்லிட்டிங்க அம்பேல் தான். ஏன் எல்லார்கிட்டயும் சொன்னேன்னு அதுக்கு ஒரு சண்ட மூணு நாள் கழிச்சு நடக்கும். ம்ம்ம்ம்ம்ம்ம்ம். இப்போ புரியுதா சார் சமாதானம் ஏன் தள்ளி போயிட்டே இருக்குனு.

ஆணோ பெண்ணோ எல்லாவற்றையும் ஒரு நிமிடம் அப்படியே விட்டு விட்டு போய் விட தான் தோன்றும். ஆனால் நம்மால் தான் அப்படி விட்டு விட்டு போய் விட முடியாதே.

எல்லாம் முடிந்து கடைசியாக அவங்க TEMPLATES ல இருந்து நம்ம போனுக்கு ஒரு சாரி மெசேஜா வரும். அது பொய்யின்னு தெரிஞ்சும் பல்லு வெளிய தெரியாம சிரிக்கிறான் பாருங்க அவனுக்கு தான் சார் தெரியும் உறவுன்னா என்ன, அதோட உளவியல்னா என்னான்னு....

எழுதியவர் : ஜார்ஜ் அ (3-Feb-14, 12:22 pm)
சேர்த்தது : a.george
பார்வை : 137

சிறந்த கட்டுரைகள்

மேலே