விள்ளல் நிலாவும் குவளை வானவில்லும்

தேவதைப் பெண்கள்
கூடி வருகிறார்கள்... இன்று
என்னோடு சற்று
பேசிச் சிரித்திருப்பதற்காய்.....!!

நீங்கள் எதற்காக
படைக்கப்பட்டிருக்கிறீர்கள் ....?

உயிர்களில் காதலைச்
செய்ய...

உயிரென்றால்.....?

உன் காதலை
தலைமுறைகளுக்கு
கடத்திப் போகும்
உருவமில்லா வினைப்பொருள்...!!!

எப்படிக் காதலைச்
செய்வீர்கள்....??

எங்கள் தேசங்களின்
ராணுவ ரகசியங்கள்
கேட்கிறாய்.... அது
சொல்வதற்கில்லை.....!!!

சரி.... எங்கிருந்து
தொடங்குவீர்கள்..?

ம்ம்...!!
ஆருடத் தோழியின்
எண்ணங்கள் கொண்டு
உன்
மூளைத் திரவங்களில்
வண்ணங்கள் கரைப்போம்...!!!

பிறகு...?

பிறகென்ன... அது
இதயங்களில் சிறகு
வளர்க்கும்...!!

இதைவிடுத்து
வேறெதுவும்................?

ம்ம்...
பூக்கள் செய்வது....!!

அப்படியென்றால்....?

நீராடிக் கழிந்த உடை
வீசியெறிவோம்... எங்கள்
தேசத்துத்
தடாகங்களிலிருந்து....
சுருண்டுவீழ்ந்து மொட்டுகளாய்
ஒட்டிக்கொள்ளும்
செடிக்காம்புகளில்......!!!

உங்களின்
உணவென்ன...?

பௌர்ணமி தினம்
தவிர்த்து...
மற்ற நாட்களில் ...
ஒரு விள்ளல் நிலாவும்...
ஒரு குவளை
வானவில்லும்......!!!

நன்றாகத்தான் செய்கிறீர்
காதலை...!!
பிறகு ஏன் பொய்கூடிய
வன்முறையும் ...
வக்கிரங்களும்... இந்நாள்
காதல்களில்...?

அது...! எங்கள்
பௌர்ணமி விரத
தினங்களில்தான் ...சைத்தான்களின்
விரகக் கழிவும்....!!
ரத்தம் ருசிக்கத் தேடும்
சைத்தான்கள் அந்நாட்களில்....!!!

சரி...! பௌர்ணமி
வருகிறது.... உன்னில் சீக்கிரமாய்
காதல்
விதைக்க வேண்டும்......!!!


துகில் களையத் தொடங்குகின்றன
தேவதைகள்....
துயிலெழும்பித் திடுக்கிட்டு
அமர்கிறேன் நான்.....!!!

எழுதியவர் : சரவணா (5-Feb-14, 8:57 am)
பார்வை : 128

மேலே