உல்லாசமோ

உல்லாசமோ!

உலகம் எங்கள் மடிகளில் என்றும்
உல்லாசமோ!
பழகும் மொழிகள் மனங்களில் என்றும்
பரவாசமோ!

ஆடும் ஊஞ்சல் ஓடும் போதும்
ஆனந்தமோ!
தேடும் இன்பம் கூடும் போதும்
திருவாசமோ!

நீரும் நிலமும் தழுவும் பந்தம்
நிசமாகுமோ!
ஆறும் கடலும் அணையும் சொந்தம்
அலையாடுமோ!

முகடும் முகிலும் பரிசம் உரசும்
சுகமாகுமோ!
பகலும் இரவும் அந்தி வருடும்
ரகமாகுமோ!

ஆணும் பெண்ணும் சேரும் இன்பம்
தேனாகுமோ!
வானும் மண்ணும் தேறும் இன்பம்
மழையாகுமோ!

கொ.பெ.பி.அய்யா.

குறிப்பு.:இத்தளத்தில் ஒரு நாள் விட்டு மறுநாள் எனும் முறையில் தொடர் நாவலாக “கரிசல் மண்ணில் ஒருகாவியம்”வெளியாகி வருகிறது.இப்போது
ஒன்பதாவது தொடர் பெரியார் சிந்தனையாக வெளியாகி உள்ளது படித்துச்
சொல்லி படைப்பை வளம் கூட்ட உதவி அருள் செய்வீராக.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா. (5-Feb-14, 9:17 am)
பார்வை : 87

மேலே