உழைத்து வாழ்
வானத்தில் இருந்து கூரையை பிச்சிகிட்டு கொட்டப்போகுது..என்று
வாய் பிழந்து வாழ்க்கை ஓட்டுபவனே இன்று...
நல்ல செய்தி ஒன்னு சொல்லப்போறேன் உன் வாழ்க்கைக்கென்று ....
வசதியோடு வாழ வழி செய்கிறேன் கவனமாய் கேள் சிறிது நேரம் நின்று ....
வானத்தில் இருந்து தினம் தினம் பிச்சிகொண்டு கொட்டி கொண்டு இருக்கு..
அதை தேடி சென்று எடுத்து வரபவனே உனக்கு வாழ்க்கை என்றும் இருக்கு...
வந்து விழும் செல்வம் எல்லாம் உனக்காய் என்று..
காலை மாலை உழைத்து தேடும் கனவிலன்று ...
காக்கும் கடவுள் கொட்டும் இடம் பூமியல்லவா...
இதை அறியாமல் உன் வீட்டுக்குள் ஒளிந்து கொண்டு கொட்டும் என்றால் வசதி கிடைக்காதல்லவா...
புரிந்தவன் பொருக்கி எடுத்து கொள்கிறான் புரிந்து கொள்ளடா...
பூமியில் வாழ்வதற்கு இந்த தத்துவம் புரிய வேண்டும் அல்லவா...
இறைவன் கொடுத்த உடலை பூட்டி வைத்து புதைத்து வைக்காதே...
கரப்பான் கூடு கட்ட வசதி செய்து தராதே ..
வீர நடை போட்டு இறைவன் கொட்டி வைத்திருக்கும் செல்வத்தை தேடி ஓடடா..
உன் குலம் விளங்க என்றும் உழைத்து வாழட....