அதுவே காதல் என கூரியது என் மனம்

ஆழகடல் ஆழம் சென்றேன்
ஆழம் அறிந்தேன்
மையக்கடல் மத்தியில் நின்றேன்
அமைதி புரிந்தேன்
அலைகளின் ஓசை கேட்டேன்
சங்கீதம் கற்றேன்
காதலுக்கு மொழி கேட்டேன்
மௌனம் தெளிந்தேன்
கண்ணீருக்கு சொந்தம் கேட்டேன்
பிரிவில் அறிந்தேன்
அழகான நிறம் கேட்டேன்
வானவில்லெனக் கண்டேன்
பூவுக்கு பாஷை கேட்டேன்
தென்றலை உணர்ந்தேன்
இவை அனைத்தும் கேட்ட நான்
காதலென்றால் என்னவென்று
எனை நானே கேட்டேன்
இவை அனைத்தும் நீ
தெரிந்து கொண்டாயே
அதுவே காதல் என கூரியது
என் மனம்

எழுதியவர் : த.பார்த்தி (6-Feb-14, 11:09 am)
சேர்த்தது : tha.parthi
பார்வை : 82

மேலே