சுற்றி வரும் பூமி

அந்தரம்
அந்தரம் அனுதினம்
அந்தரம் - தாங்கும் கைகள்
தனக்கில்லை
தயக்கமும்
எனக்கில்லை...

சுற்றுகிறேன்
சுமையோடு சுற்றுகிறேன்
நிற்பதற்கு இடமில்லை
உறக்கமும்
எனக்கில்லை..

பட்ட துன்பம்
போதுமாட பாவி மனிதன்
படுத்துதடா
வன்முறைகள்
தூண்டுதுடா - உயிர்
பழியும்
நடக்குதடா...

வாழ்வதற்கு இடம்
அளித்தேன்
அமைதியென்னும் நிழல்
கொடுத்தேன்- நன்றி
கெட்ட
உலகமடா
எனை மறந்து
வாழுதடா...

என் மனதை யார்
அறிவார் - என் நிலையை
யார் தெரிவார்

சோகத்துடன்
சுற்றுகிறேன் சுமைகளுடன்
வாழுகிறேன்...

எழுதியவர் : லெத்தீப் (6-Feb-14, 8:30 pm)
Tanglish : sutri varum poomi
பார்வை : 96

மேலே