வாழ்க்கையின் அர்த்தங்கள்
கீதை என்பது
வாழ்க்கையின் சாரம்
அனுபவம் என்பது
வாழ்வின் படிப்பினை
மௌனம் என்பது
மொழியில் சிறந்தது
கோவில் என்பது
ஆன்மிக வாசல்
நட்பு என்பது
இறைவன் கொடுத்த வரம்
விடியல் என்பது
நாளின் புன்னகை
வேகம் என்பது
இளமையின் ஆட்டம்
பாசம் என்பது
உறவின் முகவரி
காதல் என்பது
மனங்களின் புரிதல்
மனைவி என்பவள்
உனக்கு
பலத்தை சேர்ப்பவள்
அறிவு என்பது
சிந்தித்து செயல்படுவது
மனது என்பது
செய்தபின் சிந்திப்பது
உறவு என்பது
உதிரத்தால் ஆனது.