சாபம்-8

மனோகர் தணிகாசலம் வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார்,,, அருண் காரை ஓட்டிக்கொண்டிருந்தான்

அவன் மனம் என்ன விபரீதம் நடக்குமோ என்றெண்ணி தவித்து கொண்டிருந்தது ,,,,


இதோ ஒரு வழியாக தணிகாசலத்தின் வீடு வந்தது
தணிகாசலம் தன் தோட்ட பூக்களுக்கும், செடிகளுக்கும் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தார்,,

"தணிகாசலம்"- அழைத்தார் மனோகர்

"அடடே வா மனோ!!! வா தம்பி!! எப்டி இருக்கீங்க?"

"என்ன டா காலைல பாத்துட்டு சாயங்காலம் நல்ல இருக்கியான்னு கேக்குற"- பதில் கொடுத்தார் மனோகர்

"இடைல இரண்டு பொழுது போயிருக்கே அதுல ஏதும் நடந்திருக்குமோன்னு கேட்டேன் டா"


"ஆமாம் சார், நடந்திருக்கு"- நேராக விஷயத்திற்கு வந்தான் அருண்

"என்ன தம்பி சொல்ற?"

"அது வந்து,,,,,,,," - பேச நினைத்தவனை இடைமறித்து

"இரு தம்பி உள்ள வாங்க காபி சாப்டுட்டே பேசலாம்"- என்று சொல்லி வீட்டினுள்ளே அழைத்து சென்றார் தணிகாசலம்

அவர் வீடு உள்ளேயும் ஒரு தோட்டம் போலவே இருந்தது,,,,,, சிறு தொட்டிகள், மண்ணால் செய்யப்பட்ட பூஞ்சட்டிகள் அது மட்டுமின்றி அவர் வீட்டில் ஒரு பகுதியை ஒரு சின்ன பூங்கா போலவே அலங்கரித்து இருந்தார்,,,, அதில் பலவகையான செடிகளும் பசுமையாக வளர்ந்திருந்தது


அந்த செடிகளின் ஊடே அமர்ந்து தணிகாசலம் கொடுத்த காப்பியை உறிஞ்சியபடி,,,,, நடந்த யாவற்றையும் சொல்லி முடித்தனர்

தணிகாசலம் வியர்த்து போயிருந்தார்,,,,,,

"என் தப்பு தான் மனோ"- பயத்தோடு பேசுகிறார் என்பது அவர் பேசுவதிலிருந்தே தெரிந்தது

"என்ன சொல்ற தணிகாசலம்"- குழப்பமாக கேட்டார் மனோகர்

"ஆமாம்,,,,,,,, உன்கிட்ட அந்த காடு பத்தி நான் சொல்லிருக்க கூடாது,,,,,, அதும் அரைகுறையா?"

"என்ன இப்டி சொல்ற அரைகுறையான?"

"ஆமாம் அந்த காட்டோட சாபம் உன்னையும் தொடர ஆரம்பிச்சிடுச்சு"

"என்ன சொல்ற புரியிற மாதிரி சொல்லு டா"

"அந்த காட்ட பத்தி பேசுறவங்க யோசிக்கிறவங்க
எல்லாரையும் அந்த சாபம் தொடரும் டா"

"என்ன டா லூசு மாதிரி பேசுற இந்த கம்ப்யூட்டர் காலத்துல போய் சாபம் பூதம்னு பயபடுற"

"இந்த உலகத்துல மனுஷன் தெரிஞ்சிக்கித வச்சி வளர்ச்சி உண்டானத நாம நெனைக்கிறோம் ஆனால் இன்னும் மனித சக்திக்கு எட்டாத அதால புரிஞ்சிக்க முடியாத பல விஷயங்கள் இருக்கு மனோ"

"அதெல்லாம் மூட நம்பிக்கை டா,,,,,,,, மனுஷனால புரிஞ்சிக்க முடியாதது சொன்ன விஷயத்துக்கெல்லாம் அறிவியல் முறையில விளக்கம் கொடுத்து அதை கண்டுபிடிப்புன்னு சொல்லி நாம பயன் படுத்திட்டு இருக்கோம்"


"நீ சொல்றது வாஸ்தவம் தான் ஆனா எல்லாத்துக்கும் விடை கிடைக்காது மனோ"

"ஏன் கிடைக்காது ?"

"ஏன்னா சில விஷயங்கள் காலத்தாலையும், விதியாலையும் நிர்ணயிக்க படுது"

இதை கேட்ட நொடி சிரிக்க ஆரம்பித்தார் மனோகர்
அது அருணையும், தணிகாசலத்தையும் என்னவோ செய்தது

"ஏன் மனோ சிரிக்கிற?"


"இந்த மாதிரி கதையெல்லாம் போன சென்டுசுவேரி ஆளுங்கள்ட சொன்ன நம்புவாங்க நாம இருக்குறது எல்லாத்துக்கும் காரணம் சொல்ல கூடிய 21st சென்டுசுவேரி"


"இல்ல மனோ நான் சொல்றத நம்பு டா"


இவர்களின் வாக்கு வாதம் நடை பெற்று கொண்டிருக்கும் போது அதை ஒரு தேள் ஓர் செடியின் மேலிருந்து கேட்டு கொண்டிருந்தது

அது தன் கொடுக்கை மேலே உயர்த்தி தணிகாசலத்தின் கையில் ஒரு போடு போட்டது


வலியால் துடித்தார் தணிகாசலம்


(விரட்டும்,,,,,,,,,,,,,)

எழுதியவர் : நிலா மகள் (7-Feb-14, 3:59 pm)
பார்வை : 443

மேலே