இப்படிச் சொல்

வா என்று சொல்-இல்லை
போ என்று சொல்
தா என்று சொல்-இல்லை
தந்து விட்டு செல்

என்னை நீயென்று கொள்
உன்னை நானென்று சொல்
நீ சொன்னால்
நான் மகிழ்வேன் பெண்ணே
நூற்றாண்டாய்
சுமக்கின்றேன் உன்னை

என்னை உனக்குள் ஒளித்து வை
உன் உஷ்ணத்திலென்னை குளிக்க வை

கவிதையை இன்னும் பிழைக்க செய்- நம்
காதலை கொஞ்சம் தழைக்க செய்

உன்னை இங்கே அனுப்பி வை
ஊஹூம் என்பதை நிறுத்தி வை.

எழுதியவர் : ராசைக் கவிபாலா (7-Feb-14, 4:06 pm)
Tanglish : ippadich soll
பார்வை : 122

மேலே