கனவுக்காதலி

கனவில் கண்ட காதலியை
நண்பனிடம் உருவகப் படுத்தினேன்
கருநாகக் கூந்தல்
முயல் போன்ற காது
மீன் போன்ற கண்கள்
மான் போன்ற துள்ளல்
அன்னம் போன்ற நடை
சாரை போன்ற கையிரண்டு
கெண்டை போன்ற காலிரண்டு
கிளி போன்ற உதடு
மயில் போன்ற கழுத்து
அவன் சொன்னான்
நீ கனவில் கண்டது
பெண்ணையல்ல...
மிருகக் காட்சி சாலையை....!

எழுதியவர் : சித்ரா ராஜ் (9-Feb-14, 7:33 am)
பார்வை : 113

மேலே