முரண்பாடு

கண்ணகி சிலை முன்னே
கஸ்டமரை எதிர்பார்த்து
ஒரு விலை மாது
####
காந்தி சிலை முன்னே
கை நிறைய ஆயுதங்களுடன்
ஒரு மதவெறிக் கூட்டம்
####
வள்ளுவன் சிலை முன்னே
வசை பாடி நிற்கும்
பாமரக் கூட்டம்
####
பாரதி சிலை முன்னே
தூங்கி வழியும்
வழி போக்கர் கூட்டம்
####
உழைப்பாளர் சிலை முன்னே
சில்லரையை எதிர்ப் பார்த்து
ஒரு பிச்சைக்கார கூட்டம்
####்
இந்த முரண்பாடுகளின்
மொத்த உருவமாய்
உருண்டோடி கொண்டிருக்கிறது
அன்னை பாரதம்...