இனிது இனிது காதல் இனிது - பாலகுமாரன்
காதலை உலகம் எதிர்க்கிறது கடிமனத்தை மதிக்கிறது. வாழ்க்கை முழுவதும் சுமக்கத் தயார் என்று அறிவித்து விட்டால் எழுந்து நின்று மதிக்கிறது.
காதல் மனதின் வெளிப்பாடு. திடசிந்தனையின் இயக்கம், உண்மையின் செயல்.
முடிவு அவனிடம் திணிக்கப்படவில்லை உணர்த்தப்பட்டது. தினிக்கப்படுவது துப்பப்படும். உணர்த்தப்படுவது உள்ளே உறையும்.
திருமணம் என்பது நம்பிக்கை பரஸ்பர நம்பிக்கை அந்த நம்பிக்கை வர ஆழ்ந்த காதல், ஆரவாரமற்ற அன்பு முக்கியம். நேசம் உண்மையெனில் ஆடாது, அதிராது, ஆவேசப்படாது.
காதல் என்பது வார்த்தையல்ல வெறும் வெட்ட வெளி நிகழ்வல்ல செயல் முக்கியம். செயல் என்பதில் வேதனைகள் எதிர்படும். அவமானங்கள் குறுக்கிடும். அடங்கி போக வேண்டியிருக்கும்.
அவன் காசு சம்பாதித்த திமிரில் இல்லை. அனுபவம் சம்பாதித்த தெளிவில் இருந்தான்.
தெளிவு உள்ளவனிடம் பெண் சண்டையிடுவதில்லை. மாறாய்ச் சரணடைகிறாள்.
ஆண் என்பவன் அன்பு செலுத்தத் துவங்கினால் ஒரு பெண்ணும் அவனோடு போட்டியிட முடியாது. ஏனெனில், அவனுள் உள்ள பெண்மை புத்துணர்வு மிக்கது.
மனிதன் உடலால் ஆனவன். மனசால் வாழ்பவன் இவை இரண்டும் பிரிக்கமுடியாதவை
புறக்கணிக்க முடியாதவை.
உதவி செய்தல் தான் உறவின் துவக்கம் அங்கே உண்மை இருப்பின் அது பலப்படும்.
காதல் என்கிற பெயரில் வேதனை தருபவனைப் பெண் விரும்புவதில்லை. நாலு பேருக்கு முன் எள்ளிநகையாடும் விதமாய் பேசுபவனை அவள் நேசிப்பதில்லை. ஊர் உலகம் இழித்து பழி தூற்றி விடும் ஆணை மறந்தும் நேசிப்பதில்லை.
மாறாய் அதனினும் காபாந்து செய்பவனை அதிகம் அல்லடாதவனை, அனுசரணையாய் இருப்பவனை அதிகம் நேசிக்கிறாள்.
வெறுப்பில் பெண்ணுக்கு மனவளிவு மிகும் பொங்கும் காதலில் லேசாகும். வேதனை வந்தால் ஆணுக்குத் தொய்வு வரும். சொதனையெனில் தாங்கும் வெறி எழும். பிரிவில் பெண் பின்னமாவால் ஆன் ஒன்றாவான். ஒரு முகப்படுவான்.
அது ஜெயிக்க அசுர பலம் வேண்டும். ஆழ்ந்து யோசிக்க வேண்டும் என்ன செய்கிறேன் என் நிலை என்ன என்று கேள்வியும் பதிலுமாய் இருக்க வேண்டும். கேட்டுக் கேட்டுத் தெளிய வேண்டும்.
தெளிவே திடம்