அழகே
அழகே அழகா
அழகில் நான் மறைவா
அழகே...
யார் தந்த பூவா
பூ மலர்ந்த கனியா
கனி யெல்லாம் சுவையா
அழகே...
கண்ணோரம் பல செடியா
விடியாத ஒரு நிலவா
தொலைந்தேனே பொதுவா
அழகே...
உன்மேல் காதல் பிழையா
மண்ணில் அது வெகு தொலைவா
தேடி நின்றால் நான் கனவா
அழகே ...
வெயிலில் நின்ற நிழலா
வெண்பனி தந்த குடையா
வெகு தொலைவில் சென்ற முகிலா
அழகே....
கொட்டாதா உன் சிரிப்பு
வெட்டாத அதில் உன் முறைப்பு
காதல் தொடர்ந்தால் என்ன வெறுப்பு
அழகே....
மாறாத உன் பார்வை
மாற்றம் இங்கே என் தேவை
மறைஞ்சி நின்றால் எது உண்மை
அழகே....