அன்பு மழையில்
அன்பு மழையில்
அளவில்லாமல்
நனைகிறேன்....மழை
நின்றும்
குடைபிடித்து
தலையில்
தட்டி.....நானும்
கொஞ்சம்
நாணம் கொண்டேன்.....!!
காதலும்
ஒரு வகையில்
சிறு பைத்தியம்
என்கிறேன்.....அது
முழுவது
இல்லாது போனால்
முழுப் பைத்தியம்
என்றாகும்....என்றால்
மிகையாகாது.....!!
மனசில்
இடம்பிடிக்க
அடம்பிடிக்கும்
எல்லோர் மனசும்
இடம்
கிடைத்தாலும்
இல்லாது
போனாலும்.....அன்புகொண்டே
அவரவர்
வழியில் போவோம்
வலி சுமந்தோ
இல்லை மறந்தோ.....!!!

