நாமாகிய நாமாக நாம் வினோதன்

அவள் விழியோரம்
வேடிக்கை பார்க்கச்
சென்றயென் - விழிகளை
வழியாக்கி - நாளங்களில்
நடந்து - கழுத்தைக் கடந்து
இதயத்துள் குதித்துவிட்டாள் !

வலது சிரையில் - இடது
தாளெடுத்து வைத்து
உள்ளேறி விட்டாள் !
பிராண வாயுகாணது
தவித்து விடுவாளென
மூவிதழ் தடுக்கிவழி
தள்ளிவிட்டேன் - வலது
வெண்ட்டிரிக்கிளிடம் !

அங்கிருந்து வழிதவறி
நுரையீரல் வரைசென்று
சுவாசித்துவிட்டு - சற்று
வசித்துவிட்டு - கருந்துகள்
கண்டு கடுப்பாகி - அவ்வழி
திரும்பி இடது ஏட்ரியம்
ஏறி நடந்து - தடுக்கியுள்ளே
விழுந்தாள், நற்குருதியில் !

குருதியோட்ட வேகம்
கருதி - ஈரிதழ் தடுக்கிவழி
இடது வெண்ட்டிரிக்கிளுக்கு
விழச் செய்தேன் - அவ்
வெட்டுக்கிளியை - என்
ஆணவம் வெட்டிய கிளியை !

வந்தவழி வெளியேற
எத்தனித்து எழுந்தவள்
அச்சிறு அறையின் - உட்புற
சுவர்களில் - அவளுருவம்
வரைந்து கிடந்ததைகண்டு
வெளியேற மனமின்றி
உள்ளேயே கிடந்துறங்கினாள் !

இருதய சுழற்சி வேக வேகமாய்
நடை போட்டது - குருதித் துளிகள்
மீண்டும் மீண்டும் அவள்முகம் காண
வேகமாய் எண்திசை தசைகளிடமும்
தஞ்சம் புகுத்து - பின் உடன் விரைந்தன,
மகாராணியின் முகம் காண !

நானாகிய நீயாக நீயும்
நீயாகிய நானாக நானும்
இதயக் குடுவைகள் இடம் மாற்றி
இன்புறுதல்தானே காதல் !

எழுதியவர் : வினோதன் (12-Feb-14, 5:17 pm)
பார்வை : 81

மேலே