மூன்றாம் பிறை

கண்ணே , கருவிழியே
எந்தன் உயிரென கண்டேன் உன்னை நானே
கண்கள் மூடி பார்த்தேன் நானடி
கண்ணெதிரே உன் முகம் தானடி ...
நேற்றோ நானும் தனிமையில் தவித்தேன்
தேற்றிட நீயும் துணை என வந்தாய்
நரகம் வேண்டாமே உன் காதலும் விழிகளும் போதுமடி ...
ஏனோ தெய்வம் சதி செய்யுதோ
கானல் போலே உனை மற்றுதோ ...
கண்ணே , கருவிழியே
எந்தன் உயிரென கண்டேன் உன்னை நானே
பெண்மை என்றால் அதிலொரு பெருமை
பேசும் கண்கள் அதிலொரு புதுமை ...
விழிகள் பேசியதை கண்டே நான் விழுந்திட முனைந்தேனே ...
விழியில்லாமல் எது நிம்மதி
உன் விழியே எந்தன் உயிர் சுவர்க்கமே ....
கண்ணே , கருவிழியே
எந்தன் உயிரென கண்டேன் உன்னை நானே ....

எழுதியவர் : சிவா (15-Feb-14, 2:34 pm)
சேர்த்தது : சிவா அலங்காரம்
Tanglish : moonraam pirai
பார்வை : 150

மேலே