உணர்வு
நிஜத்தை தானம் செய்து
கனவைத் தத்தெடுத்துக்கொள்கிறேன்
அடுத்தடுத்த நொடிகளையும்
நாளைய விடியலையும்
இந்நொடியிலிருந்து கடனாய் பெற்று உன் நினைவில் இலைபாருகிறேன்
உன்னை சொந்தமாக்க கடவுளிடம் பட்டிமன்றம் நடத்துகிறேன்
மனசாட்சியின் கேள்விகளுக்கு விடைத்தெரியாமல் உணர்வை நீதிமன்றம் அனுப்பி
விதியைக் குற்றவாளிக்கூன்றில் ஏற்றுகிறேன்
இறுக்கக் கண்ணை மூடிக்கொண்டு கண்ணீர்த்துளிகளின் நீர் வீழ்ச்சியில் மனத்தைக் கழுவ முயல்கிறேன்
கனவில்தான் உன்னுடனென்றால்
தாயின் கருவறையை கல்லறையாக்கிருப்பேன்
நித்தமும் உறங்கிருப்பேன்
நட்பைத் நிராகரித்து
காதல் தீர்மானத்திற்கு ஓப்புதல் பெற்றேன்
காதல் என்று சொல்லவோ
காதலை நட்பென்று மறைக்கவோ
துணிவில்லை
காதலிக்கிறேன்
அதனால் காவியம் புனைகிறேன்
நீ மறுத்தால் காயம் ஏற்பேன்
எனினும் காதலிப்பேன்