வரம்

பட்டாம் பூச்சிக்கு கிடைத்த சுதந்திர
வரம் போல் !

உயர்வான காற்று கண்ட
வரம் போல் !

பெண்மை கொண்ட தாய்மை
வரம் போல் !

மண்வாசனையை உழவன் நுகரும்
வரம் போல் !

இரவு கொண்ட இன்றியமையா இருள்
வரம் போல் !

பச்சிளங் குழந்தை கொண்ட வாய்
போன்ற வரம் போல் !

மலையின் மறுபக்க மரங்கள் கண்ட
மழை வரம் போல் !

மழலை காண கண்கள் பெற்ற வரம் போல் !

ஆடவர் காண மங்கையர் கொண்டு
வந்த வரம் போல் !

கானல் நீரும் கண்ணீரை கண்டுணர்ந்த
வரம் போல் !

வன்மை கொண்ட மென்மை
வரம் போல் !

விழி மூடா காற்றுக்கு வெட்கம் கொண்ட
வரம் போல் !

மனிதன் கொண்ட காய
வரம் போல் !

நடு நிசி கொண்ட களவு இன
வரம் போல் !

கண் கொண்ட சாகா கண்ணீர்
வரம் போல் !

எனக்கு கிடைத்த சித்திர (என் தோழி )
வரம் போல் !

எழுதியவர் : வேல் முருகானந்தன்.சி (17-Feb-14, 5:42 pm)
Tanglish : varam
பார்வை : 66

மேலே