பரவாச் சிறகுகள்

கடல் நீரை குடிநீரை
எண்ணிச் ஏமாறும் நீர்த்திவலைகள் !

கண் இமைபோல் வந்து சேரும்
நிலையான கருவிழி அல்ல பாதியோடு ஒன்றிணைய !

தென்றல் காற்றாய் நினைத்தெளுந்தேன்
பிறகு தெரிந்தது
அக்னிக் காற்றுக்கு அன்னை என்று !

ஆலமரம் விழுது என்று கணித்து
மகிழ்ச்சியை பகிர்ந்து விரும்பி
முருங்கை செடி இலையை பிடித்து விழுந்தேன் !

என் மனமே அலுத்து புலம்புகிறது
என் இப்படி நடத்து கொண்டாய் என்று !

காற்றை தேடி செல்கையில் ஏன்
மூச்சு தேவைஇல்லாமல் செலவழிக்கிறாய் !

நடந்து செல்கையில் ரத்தம் கொட்டுகிறது
காலில் முள் என்று
பிறகு தெரிந்தது அது பாம்பு பல் என்று !

எழுதியவர் : வேல்முருகானந்தன்.சி (17-Feb-14, 5:52 pm)
பார்வை : 95

மேலே