காதல் தானா இது

உயிர்க்காற்று மூசுக்குழலுடன் மனம் பகிர்ந்து
காதல் சுமையை தாங்கி செல்கிறது
காதல் வலியுடன் !

காற்றாய் பறந்து
கண்ணுள் கலந்து
காதலை அள்ளித் தெளித்து
வாசல் நிறையக் கண்டேன்
உன் பேச்சில் !

விழியைத் தாண்டி கவிதை தெரியாமல்
நின்றேன் உன் மனவார்த்தை
கூறாமல் இருந்த போது!

ஒரு கணம் இருகணமாய் பிளந்து
மனம் கனமாய் கனக்கிறது
உன்னை நினைத்து உருகி !

நிழல் விழா உருவமாய்
நீந்தி அளந்து திரிகிறேன்
இந்த பூமிக்கு பாரமாக !

நிழல் காணா நிலா கொண்ட
ஓவியச் சாரல் நிழலை பிரதிபளிக்கிறது
உன் மொவன அலை வீசிய பொழுது !

காற்றுடன் ஒட்டுறவா மழைநீர்
இன்று
சாரல் காற்றுடன் தவம் புரிகிறது !

இருள் கண்ட புதைமணல் கூட
உன் அழகைக் கண்டு மனம் இறங்கும்
குண மாறுதல் பெரும் !

கண் பார்வைக்கு கர்வம் கொள்ள வைக்கும்
கவிச்சாரல் பொழிந்த
பனித்தூறல் தான் நீ !

விழிப்பாதை
விழிப்பார்வை
கட்டளை மதியாமல் மனதுடன்
கைகோர்க்கிறது
உன்னை கண்ட பொழுது என் கண்கள் !

வென்தூறல்
சாரல் காற்றுடன் வர்ணனை கவிதை
எழுத்து முயல
முகில் கூட்டம் நகர்கிறது
உன் அழகினைக் கண்டு !

எழுதியவர் : வேல்முருகானந்தன்.சி (17-Feb-14, 6:09 pm)
பார்வை : 71

மேலே