திருப்பங்களின் திருத்தங்கள்

வாழ்க்கையின் பயணம்
வானுயர்ந்த கனவுகள்
பயனங்களிங்கு பலவிதம்
கவனம் குறைந்துவிட்டால்
தடமாறும் வழித்தடம் ,,

ஏற்றம் இறக்கங்களே
வாழ்க்கையின் தத்துவம்
முந்திக்கொண்டு போவதற்கு
முயர்ச்சி ஒன்றே வாகனம்
முடிவைத்தேடும் முயற்சியில்
முடியும்வரை பயணம் ,,,

கண்களுக்கு குளிர்சியாய்
இயற்கை அழகினை
ரசிக்கின்ற வேளையில்
அதிலுள்ள இடர்களையும்
சந்தித்தே தீரவேண்டும்,,,

இன்பமும் துன்பமும்
வாழ்வின் துருவங்கள்
போராட துணிந்துவிட்டால்
பொக்கிஷம் கைசேரும்
மறுத்தே நின்றுவிட்டால்
போர்களமே வாழ்க்கையாகும்,,

அழுகையும் சிரிப்பும்
கிடைத்திட்ட நல்வரம்
வரத்தை சாபமாக்குவதும்
நமக்கு சாதகமாக்குவதும்
கையாளும் முறையிலேயே

திருப்பத்தில் ஒளிந்திருக்கும்
திருத்தங்கள் தெரியாது
ஒற்றை நிகழ்வே இங்கு
வாழ்வுதனை புரட்டிவிடும்
சளைத்து நின்றுவிட்டால்
என்றும் சாதிக்க முடியாது ,,,,

திருத்தி அமைப்போம் வாருங்கள் ,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்,,,,,

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்,, (18-Feb-14, 2:57 pm)
பார்வை : 77

மேலே