பூவின் ஓசை

தென்றல் காற்றும் எனும் மை எடுத்து
வானம் எனும் தாயின் கருவறையில்
வரையப்பட்ட சுவரோவியம் தானோ நீ !

பாறை உருவம் உடலில் பொருத்தி
மங்கை குணம் மனதில் பொருத்தி
பூமித்தாயின் மடியில் நடக்க பிறந்த குழந்தை !

உனக்காக வடிக்கப்பட்ட வார்த்தைகள்
கவிதைக் களங்களில் இருந்து
தேர்ந்தெடுக்கப்பட்ட நெல்மணிகள் !

நெல்மணி குணம் கொண்ட உனக்கு
நெற்பயிர் குணம்
கண்டு வளரவில்லை ஏன்!

உன் பிரதிமை அழகினைக் கண்டு
பாறாங்கல் கூட கவிதை வடிக்கும் !

பூடகத் தன்மை காணா
பூலோகத் தேவதைக் கடல் நீ !

பிரதிட்சனம் கொண்டு வாழும்
புல்லாங்குழல் சரிதை கொண்ட மங்கை நீ !

குரல் பேசும் பேச்சுக்கு தவம்
கண்ட பாறாங்கல் கூட
பன்னீர் பூவாய் மாறும் !

உன் குணம் கொண்ட
பின்னொட்டு எழுத்தாக பிறக்க
வரம் இல்லை எனக்கு ஏன் !

தென்னை நீரின் குணமும்
குடுவையின் நிழலும்
வலுப்பெற வாய்த்த
கன்னிப் பாவை நீ !

கவிதை சொல்விந்தையில் பிறந்தவை
மழை நீர் விந்தையில் பிறந்தவை
மண் பாறை விந்தையில் பிறந்தவை
இந்த கவிதை உன் விந்தையில் பிறந்தவை !

எழுதியவர் : வேல்முருகானந்தன்.சி (18-Feb-14, 6:14 pm)
Tanglish : poovin oosai
பார்வை : 101

மேலே