எதிராளி

கண் கண்ட காவில் கூட
கண்களுக்கு எதிரொளி தானே !
எப்போதும் எதிரொளிகள் கண்களுக்கு ஏன்
தோழன் அல்ல
யார் விட்ட சாபமோ !

கருவறைச் சுவர்களுக்கு கருவெளியேறுதல்
கூட எதிரொளி தான் ஒரு கணத்திலிருந்து !

உயிர் காக்கும் மழைத்துளி
கூட பரவைக்களுக்கு எதிராளி தான் !

உண்மை நட்பு கூட
அதன் அடிமையான காதலுக்கு
முதல் எதிராளி தான் !

பறந்து செல்லும் காற்றுக்கு கூட
மரமும் ஒருவகை எதிராளி
மறுவகையில் காதலனும் கூட !

வலியும் பாடமும்
தந்த தோல்வி கூட வலி வந்த
வெற்றிக்கு எதிராளி தான் !

குழந்தை பேச்சுக்கு
மங்கையின் பேச்சு கூட
எதிராளி ஓசை தான் !

உள் மன கட்டளைக்கு
மூளை கட்டளை
எதிராளி தானே ! தோழமைக்கு விரோதம் அல்லவா!

வழிவந்தவர்களுக்கு வழிகள்
எல்லாம் எதிராளிக் கூட்டமாய்
தெரிந்திருக்கும் கடக்கும் தருவாயில் !

வட்டம் அடையா கவிஞனின்
வார்த்தைகள் கூட
கவிதைத் தொகுப்பாய் பிரதிபலிக்கும் !
தன்னிறைவு அடையா கவிஞருக்கு மட்டும் !

உயிர் காக்கும்
உயிர்ப்பாதையும் காற்றுப் பாதையும்
எதிராளி தானே !

எதிராளி அவை எதிரி அல்ல
நாம் நினைத்ததை செயல்படுத்த உதவுபவர்கள் !

எழுதியவர் : வேல்முருகானந்தன்.சி (18-Feb-14, 6:56 pm)
பார்வை : 66

மேலே