கொடுத்தபடி தொடுத்த பாடல்

அறுசீர் மண்டிலம்

குறிலீற்று மா + விளம் + மா + விளம் + விளம் + மா

அச்சம் தருமணு உலையை
அகற்றிட அமைதியின் வழியில்
உச்சம் தொடுகிற போரை
உயர்த்தியே பிடிப்பவர் மீதில்
மிச்சம் ஒருசிறி தின்றி
வீசினர் தேசிய சட்டம்
துச்சம் அதுவெனத் தள்ளித்
தொடருவோம் போரினை தமிழா!

எழுதியவர் : அகரம் அமுதன் (23-Feb-14, 7:00 pm)
பார்வை : 140

மேலே