என்றுமில்லை தீபாவளி

கொழுத்த அமாவாசையாம் தீபா வளிக்கு
பழுத்த பழமொன்று கரவேடுகட்டி
பழமை வழக்கங்களை ஆசையோடு சீராக்கி
அழைப்புறுமவர்க்கு யாதுரைப்பேன்? - நல்
நேரங்கூடி அருந்ததி தேடி கரங்கொணர்
அரம்பை பௌர்ணமியாய் உடன்மின்ன
இனி யென்றுமில்லை யமக்கு தீபாவளி
என்னவளோடு யாமிருக்கும் வரையிலே !!

எழுதியவர் : ஹரிஹரன் (25-Feb-14, 6:25 am)
பார்வை : 83

மேலே