திருமணம் ஒத்த பழமொழிகள்

காதல் என்னும் நோயைக் குணப்படுத்தத் திருமணமே சிறந்த மருத்துவமனை: மனைவியே மருத்துவர். - பால்சாக்

* மனிதர்களுக்கு முழு இன்பத்தையோ முழு மன நோயையோ தருவது திருமணந்தான். -கவிஞர் பைரன்பிரபு

* ஒரு பெண்ணுக்கு வாழ்க்கையில் கிடைக்கக்கூடிய பேறுகளுள் சிறந்தது, சிறந்த நல்ல கணவனைப்பெறுவது. - பால்சாக்

* உங்கள் மனைவியின் தாயார் உயிரோடிருக்கும் வரை, மன அமைதியை எதிர்பார்க்காதீர்கள். -கிப்போர்ட் வில்லியம்ஸ்

* உற்சாகம் குறைந்துவிட்டால், ஆண்கள் திருமணம் செய்துகொள்கின்றனர். வாழ்க்கையில் புதுமை காண விரும்பினால், பெண்கள் திருமணம் செய்து கொள்கின்றனர். இருவருமே அதில் ஏமாற்றந்தான் அடைகின்றனர். -ஆஸ்கார் ஒயில்ட்

* திருமணம் என்பது வாழ்வியல் கலந்த அறிவியல். -பால்சாக்

* மனிதன் அதிர்ஷ்டசாலியாகப் பிறந்து பயனில்லை தன் திருமணத்தில் அவன் அதிர்ஷ்டசாலியாக இருக்க வேண்டும். அப்போதுதான் அவன் உண்மையில் அதிர்ஷ்டசாலியாகப் பிறந்த மனிதன் ஆவான். -ஆன்டேஸியர்.

எழுதியவர் : முரளிதரன் (25-Feb-14, 12:47 pm)
சேர்த்தது : முரளிதரன்
பார்வை : 211

சிறந்த கட்டுரைகள்

மேலே