விதியின் விளையாட்டு

மன்னவன் ஒருவன்
வந்தான் வாழ்வில்
மண்ணிலுள்ள சந்தோசம்
தந்தான் என்னில்!!!!

வந்தவன் வந்ததை
வருபவன் அறிவான்
வருபவன் சொல்லவில்லை
வந்தவன் துரோகி என்று!!!

வருபவன் சொல்லிருந்தால்
வந்துதிருக்காது துன்பமும்
வந்தவன் தந்ததை எல்லாம்
வருபவனும் எதிர்பார்த்தான்!!!

சிந்தையில் சேதம்
தந்தவன் வந்தவனா???
மருந்தை தருவது
வருபவனா ???

வந்தவனுக்கும்
வருபவனுக்கும்
வித்தியாசம்
ஏதுமில்லை,,,,,,,,,,,,

வந்தவனும்
வருபவனும்
சிந்தையில்
நிற்பதெல்லாம்

எந்தன்
விதி செய்த
விளையாட்டோ???

எழுதியவர் : நிலா மகள் (25-Feb-14, 4:12 pm)
பார்வை : 142

மேலே