குடிக்காதே தம்பி குடிக்காதே

குடிக்காதே தம்பி குடிக்காதே!!

குடிக்காதே தம்பி குடிக்காதே
குடிக்காதே தம்பி குடிக்காதே
அடிமைத் தனமாய் மயங்கிவிடாதே
குடும்பம் இருக்கு மறந்துவிடாதே! (குடிக்காதே)

பாட்டிலைப் பாரு எழுத்தும் பாரு
பழகும் முன்னே படிச்சுக்கோ—குடிக்கப்
பழகும் முன்னே படிச்சுக்கோ
குடியே குடியைக் கெடுக்கும் என்று
கூறும் வரிகளைப் புரிஞ்சுக்கோ
குடியே குடியைக் கெடுக்கும் என்று
கூறும் வரிகளைப் புரிஞ்சுக்கோ (குடிக்காதே)

வட்டம்போட்டு கெடுக்குற கூட்டம்
திட்டம் போட்டு வளையுது
வட்டம்போட்டு கெடுக்குற கூட்டம்
திட்டம் போட்டு வளையுது`--உன்னை
கட்டம் கட்டி இழுக்குற கூட்டம்
மட்டம் போட்டே அலையுது `--உன்னை
கட்டம் கட்டி இழுக்குற கூட்டம்
மட்டம் போட்டே அலையுது
நினைத்து உனையும் உணராவிட்டால்
நீசரைநீ தப்ப முடியாது.
குடிப்பவன் தானே திருந்தாவிட்டால்
குடியை ஒழிக்க முடியாது. (குடிக்காதே)

கெடுக்குற காலம் கலிகாலம்—இனி
தடுக்குற முயற்சி இருக்காது.—குடி
தடுக்குற ஆட்சி வாராது.
குடிக்கத் தடையும் சட்டம் போட்டா
குடிக்கத் தடையும் சட்டம் போட்டா
வடிக்கிற தொழிலும் உருவாகும்—அதை
தடுக்குற படையே வளமாகும்.
குடிக்கிற பழக்கம் மறந்து போயிட்டா
குடிக்கிற பழக்கம் மறந்து போயிட்டா
கெடுக்குற குடியும் இருக்காது. (குடிக்காதே)


கொ.பெ.பி.அய்யா.


குறிப்பு:
கரிசல் மண்ணில் ஒரு காவியம்

அத்தியாயம் 13 (180649) படிக்க வாருங்கள்.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா. (26-Feb-14, 1:16 am)
பார்வை : 716

மேலே