திவலைகள்

திவலைகள்...
=============

அழகான ஆற்றுப் படுகை
எட்டி நின்று ரசிக்க மட்டும்
புதைமணல் / மண்குதிர்
************************************************

விமர்சன தட்டு மேலேறி
கவிதையை கீழிறக்குகிறது
கருத்துத் தராசு
************************************************

அரிச்சுவடிக்கு
கலைக் களஞ்சிய திணிப்புகள்
குழந்தை விழித்தபடி
************************************************

நிழல் தரவில்லையாம்
மூர்க்கமாய் வெட்டப்படுகிறது
பட்டமரம்
************************************************

பனி மெத்தையென நினைத்து
குறிஞ்சிப் பூ சாம்பல்
பாஸ்பரஸ்  

===========================================

குறிப்பு :

இது எந்த விதமான பா வகையையும் சார்ந்ததல்ல என் சொந்தப்பா.

===========================================

எழுதியவர் : சொ. சாந்தி (26-Feb-14, 9:12 am)
பார்வை : 140

மேலே