சீர்வரிசை

சிரிக்கின்ற உன் பல் வரிசை
போதுமடி
உன் அம்மாவிடம் சொல்
சீர்வரிசை
வேண்டாம் என்று.

கட்டிக்காப்பேன்
உன்னை
எனக்கு கட்டிக்கொடுத்தால் போதுமடி
கட்டிலும் மெத்தையும்
எதுக்கடி?

அன்பாய், பத்திரமாய்
பார்த்துக்கொள்வாய்
என்னை
அண்டாவும் பாத்திரங்களும்
எதுக்கடி ?

இரண்டு கைகள்
இரண்டு கால்கள்
ஒரு இதயம்
கொண்டு
உன்னை தாங்க வீட்டுக்காரர்
நான் இருக்கும் போது
நான்கு சக்கர 'கார்'
எதுக்கடி?

சொந்தங்களை விட்டு
சொத்தாய் என்னிடம் வந்த
உன்னை
செத்தும் சுமப்பேனடி.

எழுதியவர் : விஜய் கணேசன் (26-Feb-14, 12:51 pm)
சேர்த்தது : விஜய் கணேசன்
பார்வை : 191

மேலே