உடையா உலகமா

எதுவென்று சொல்வேன்
பெண்ணே
எதுவென்று சொல்வேன்

இங்கு என்னென்னவோ
நடக்கிறது,,,,,,,,,
எல்லாம் நீ நடக்கும்
விததாலோ???

ஆணுக்கு நிகர் இந்த
பெண் என சொல்லி
நீ செய்யும் யாவும்
கேலிகூத்தானது .......

உடையிலும்
உதவா பழக்கத்திலும்
நிகர் இங்கு வேண்டுமா ???

காம மிருங்கங்கள்
காத்திருக்கும்
காடு இது

இங்கே சமத்துவம்
பேசி நீ பாதியாய்
திரிவதால்
தீனிதான் போடுகிறாய்!!!!


தீராத பழிச்சொல்
தீண்டி தீயாய்
மாறி திரும்ப
நிலைத்தாலும்


விடாதம்மா நீ
ஏற்று கொண்ட
நாகரீகம் !!!


மதுவும் போதையும்
மாற்றிடும் நம்
விதியை!!!

ஏற்றிடுவார்
யாருமில்லை - நீ
தேன் தொலைத்த
பூவானாள் !!!


தூற்றிடுவார்
அனைவரும்
தூக்கிவைக்க
ஆளிலாமல் போவாய்!!!!!!


சமத்துவம் வேண்டும்
தான் கண்ணே - அது
சகதியில் புரள்வதில் அல்ல
சாதனை படைப்பதில்


ஆண் செய்தான்
நான் செய்வேனென
அவன் குணத்திற்கு
அடிமையாய் போகாதே

பாரதி கண்ட
கனவு இதுவல்ல!!!!


புதுமை பெண்ணே!!!
புருவம் உயர்த்தி
பேச வேண்டும்
உன்னை

ஆனால் நீ
செய்யும் செயலால்
முகம் சுளிக்க
வைத்து விடாதே!!!!

ஆடை மறைந்த நீ
அழகற்றவள் அல்ல
கருமேகம் மறைத்த
நிலா!!!!

சமுதாய வானில்
சிறகடிக்கும்
வெண் புறாக்களே !!!

இங்கே வேடர்கள்
அதிகம் வட்டம்
அடிக்க தனி இடம்
தேடுங்கள்


*******************************************************************

(தோழர் இஸ்மாயில் அவர்களின் தூண்டுதலாய் வந்த கிறுக்கல் நன்றி தோழரே )

எழுதியவர் : நிலா மகள் (26-Feb-14, 3:45 pm)
பார்வை : 165

மேலே