தெரிந்த சில ஆன்மீக சிந்தனைதுளிகள் , கருத்துகள் உங்களுக்காக -

தெரிந்த சில ஆன்மீக சிந்தனைதுளிகள் , கருத்துகள் உங்களுக்காக :-

பிறரை மதிக்கப் பழகுங்கள்:-

உயிர்களிடம் நாம் காட்டும் அன்பும், உணர்ச்சியும் அருள் இரக்கங்களும், இறைவனைப் போல் பயன் கருதாததாய் இருக்க வேண்டும்.

தயவு அதிகம் இருப்பவரிடம் கடவுள் இருக்கிறார்.

தயவு இல்லாதவர்களிடம் கடவுள் இருந்தும் இல்லாமையாய் இருக்கிறார்.

கருணை உள்ளத்தோடு சன்மார்க்க நெறியில் நடப்பவர்கள் புண்ணியசீலர் ஆவர்.

அவர்கள் கூறும் திருவார்த்தைகள் வேதாகமங்களுக்கு நிகரானவை.

*வாழ்க்கை ஒரு மாயப்பேழை*

உலகம் பொன்னுக்கும், பொருளுக்கும் முக்கியத்துவம் அளிப்பதாய் இருக்கிறது.

யாரையேனும் நாடிச் சென்றால் இந்த ஆள் நம்மிடம் ஏதேனும் பற்றிச் செல்லத்தான் பலகாலும் வந்து கொண்டிருக்கிறானோ என்று கருதிக் கொள்வார்கள்.

அதன் காரணமாக அலட்சியமாய் நடந்து கொள்ள முற்படுவார்கள்.

எல்லாம் தெரிந்தவர் போல் பிறர்க்கு உரைப்பது மனித இயல்பு.

குறைவற்ற அறிவு நாம் பெற்றிருக்கிறோமா, குறைவற்ற மனத்தை நாம் கொண்டிருக்கிறோமோ என்றவர்கள் சுயமதிப்பீடு செய்து கொள்வதில்லை.

நாம் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவது நன்மை அன்று.

ஏழு திரைகளுக்கு அப்பால் இருக்கிறது பேருண்மை. அத்தனை திரைகளையும் அகற்றி மெய்ப்பொருள் உண்மை காண முயற்சி எட்டுக்கவேண்டும் நம்மில் ஒரு மாயை பேழையைத் கடவுள் தந்தார் .

அரிய பொருள் ஒன்று அதிலிருப்பதாகச் சொன்னார் ,திறந்து பாரென ஒரு திறவுகோலையும் கொடுத்தார் .

வாழ்க்கை முழுவதும் அதைத் திறந்து பார்க்கிற முயற்சியில் நாம் இருக்கிறோம் .

...

எழுதியவர் : முரளிதரன் (27-Feb-14, 10:31 am)
சேர்த்தது : முரளிதரன்
பார்வை : 240

சிறந்த கட்டுரைகள்

மேலே