ஒப்பீட்டு வாழ்வு

முடிவிலாக் கேள்விகளை
மூளை முடிச்சுகளில் நிரப்பி
முழுமையாய் விடையில்லாது
முரண்களுக்குள் புதைந்து
ஆசைக்கும் தேவைக்கும்
அகராதி தேடி அலைக்கழிந்து
பொருளாதாரத்தோடு போரிட்டு
பேசத் திராணி அற்று
பெருமூச்சுகள் காற்றுக்குள்
முடங்கிக் கிடக்கும் மனங்கள்


கொள்கைகள் தொலைந்து போன
மனித வாழ்வில்
கோட்பாடுகளுக்குள்
அகப்படாத எதிர் பார்ப்புக்கள்
ஒப்பீட்டு வாழ்வியலே
ஒவ்வோர் நிகழ்விலும்.
கையிலுள்ள பை
காலியாக இருந்தாலும்
கட்டுக் கடங்காத ஆடம்பர
வாழ்க்கை வாழ
கடனட்டையை நம்பி
நகரும் நாட்கள்!

எழுதியவர் : உமை (28-Feb-14, 3:15 am)
பார்வை : 95

மேலே