என்ன என்ன வார்த்தைகளோ

எழுதிய வார்த்தைகள் ஏராளம்
எண்ணாமல் சொன்னவை தாராளம்
எங்கோ முடிந்த வாழ்வு
எங்கோ தொடர்கிறது!!!!

ஏற்று கொண்டேன் விதியே
என் மீது நீ திணித்ததை
எல்லாரும் மகிழ்ச்சியில்
என்னுள்ளே ஏதுமில்லை!!!

என்னன்னவோ தோன்றியது
என் எண்ணத்தில்
எங்கெங்கோ அலைபாயும் மனம்
எப்படியோ போகிறது தினம்!!!

எந்த நாளும் காணாத
எந்தன் கனவு இன்று
எங்கிருந்தோ பலித்தது
எப்படி என்று புரியவில்லை

எது எப்படியோ எங்கோ
எதோ எப்பொழுதோ
எவனோ எழுதிய எழுத்து
ஏட்டில் எழுந்து நிரம்பியது என்னுள்!!!

எழுதியவர் : நிலா மகள் (28-Feb-14, 12:04 pm)
பார்வை : 203

மேலே