தமிழ்
கன்னல் சாறெடுத்து கனியைச் சேர்த்தாலும் – நீ
காட்டும் சுவையதிலே கடுகும் இருந்திடுமா?
உன்னை ஓதாமல் உலகில் வாழ்வதுவோ? – உந்தன்
உயர்வைக் காணாமல் உடலும் ஓய்வதுவோ?
அன்னை மொழியானாய் அறிவின் வழியானாய் – இந்த
அகிலம் கல்லான அன்றே உருவானாய் !
கண்ணின் இமைபோல காப்போம் உனைநாளும் – இங்கு
கதிராய் ஒளிவீசி கமழ்வாய் எந்நாளும் !