ஹைக்கூ - தாய் -பூவிதழ்

தாயின் பரிகாரம் -
மகனுக்கு கண்டம்
மகனோ கண்டங்கள் தாண்டி
------------------------------------------------------------------------------------

விசா -
தாய்க்கு கிடைத்துவிடுகிறது
மகனுக்கு முன்னே
------------------------------------------------------------------------------------

பதினாறாம் நாள்
பாலூற்றவருகிறான் (பாசத்தோடு )
பாலூட்டியவளுக்கு
________________________________________________

முதியோர் இல்லத்தில்
பிறந்தநாள் கொண்டாடினாள்
கிரீன் கார்டு ஹோல்டர் மகனுக்கு
-------------------------------------------------------------------------------
தன்மகன் கொள்ளிவைப்பான் என்ற
கடைசி ஆசையும் நிறைவேறாமலே போனது
தேர்தல் வாக்குறுதியைபோல

எழுதியவர் : பூவிதழ் (1-Mar-14, 4:37 pm)
பார்வை : 156

மேலே