தூது செல்லும் கண்ணீர் மழை 555

உயிரானவளே...

காகிதத்தில் என் காதலை
உனக்கு தூது அனுப்பினேன்...

காற்றில்
பறக்க விட்டாய்...

வண்ணமலர்களை
தூது அனுப்பினேன்...

வெயிலில்
வாட விட்டாய்...

இன்று...

என் கண்ணீர்
துளிகளை...

மழையாக தூது
அனுப்பியுள்ளேன்...

பிரியமானவளே
என் அன்பை நீ உணர...

பிரியமானவளே உன்
கரைக்கவே அனுப்பியுள்ளேன்...

கண்ணீர் மழை தூதாக...

கண்ணீர் துளிகளே
கரைத்து விடாதீர்கள்...

என்னவளின்
இதயத்தினை...

இரும்பல்ல
அவள் இதயம்...

மலரிலும் மெல்லியது
என்னவளின் இதயம்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (1-Mar-14, 5:06 pm)
பார்வை : 227
மேலே