வீசியெறியட்டும் அவர்கள்

கல்லெறிகிறார்கள் !
கயிற்றின் மேல் நடந்துக் கொண்டிருக்கும்
என் மீது கத்திகளையும்
எறிகிறார்கள்...
போன முறை அடிப்பட்ட
காயங்கள் இன்னும்
காயங்களாகவே தான் இருக்கின்றன...

ஒற்றை நூலினில் தொங்கிக்
கொண்டிருக்கும் பெருங்கல்லாய்
என் உயிர்
தவித்துக் கொண்டே தான் இருக்கிறது...
சற்று உற்று நோக்கினால் தெரியும்
சொட்டு சொட்டாய்
வெளிப்பட்டுக் கொண்டிருக்கும்- என்
சிவப்பு திரவத்தின்
வடிவங்கள்...

வார்த்தைகள் வற்றிப் போகின்றன-என்
வலிகளை எழுத முயல்கையிலே....
ஆனாலும்
எழுதிக் கொண்டு தான் இருக்கிறேன்
கிறுக்கல்-என்
குருதித் துடைக்கும்
என்றொரு மூடநம்பிக்கையில்...
பிய்த்தெறிய வேண்டும்-என்
பிதற்றல்களை...
அழித்தெறிய வேண்டும்-நான் பட்ட
அவமானங்களை...

வீசியெறியட்டும் அவர்கள்
அம்பெனும் பெயர் கொண்ட
ஓர் அழிப்பானை...
நினைவழிக்கும்
மந்திரக்கோலை...
வீசியெறியட்டும் அவர்கள் !!

எழுதியவர் : யுவபாரதி (3-Mar-14, 7:23 pm)
பார்வை : 75

மேலே