பெண்ணுரிமையும், மகளிர்தினமும்
பெண்ணுரிமை ஒரு மாயை...
இந்த நிழற்படம் போல...
முதலாம் தலைமுறையே...!!!
கூண்டை உடைத்து வெளியே வா...
என அறைக்கூவல் விட்டு...
விவசாய நிலங்களை மட்டும்
தாராளமயமாக்கி... சிறப்பு
தொழில்மயங்களை அமைத்து
தோரணம் காட்டுகின்றனர்.....
அடுப்பு ஊதும் பெண்ணே...
அகிலம் ஆள வா... என போலி
அறைக்கூவல்...
உண்மை என நம்பிவந்த என்குல
உத்தமிகளை நாசமாக்கும்
பெட்டைத்தனம்... எங்கே
பெண்ணுரிமை..?..
விவாதங்களிலும்
விலை போகின்றனர் எம்
பெண்களே..... எங்கே
பெண்ணுரிமை...?
பெண்ணுரிமை ஒரு மாயை...
பெண்களுக்கு மட்டும்
பெண்களே போராடும் வரை....
பெண்ணுரிமை சாத்திமில்லை...
சாத்தியமில்லாத போது....
மகளிர் தினமும் சாத்தியமில்லை