செவ்விதழ்

வெள்ளிதோறும் செவ்வாடை அணிவேன்
வாரம் இருமுறை செவ்விளநீர் குடிப்பேன்
வாரம் ஒருமுறை செவ்வாழை சுவைப்பேன்
அந்தி பொழுதின் செவ்வானம் ரசிப்பேன்
மலர்களிலே செவ்வந்தி ரசிப்பேன்
இன்று உன் செவ்விதழ் கண்டேன்
சிலையாகி போனேன்
சிவப்பு ராசி கொண்டவன் நான்...
உன் கொவ்வை செவ்விதழ்
கொய்யும் காலம் கனிந்திடுமோ?

எழுதியவர் : சித்ரா ராஜ் (7-Mar-14, 9:15 pm)
சேர்த்தது : சித்ராதேவி
Tanglish : sevvithazh
பார்வை : 217

மேலே