கனவே கலையாதே பாகம்-1

கொக்கரக்கோ...கொ.கொ...
கொகக்ரக்ககோ...கோ...
சேவல் கூவிக் கூவி துகிலெலுப்ப...
சிவந்த கண்ணை மெதுவாய் திறந்து ஞாயிறும் துயிலெழும்ப
பொழுதும் புலர்ந்திட ஏற்றம் முடித்தான் உழவனும்...
பயிர்கலெல்லாம் மகிழ்வாய் பனியை வாரி அனைத்திட,.
புதிதாய் ஒருநாள் பிறந்து விடிந்தது பரனூரெனும் சிற்றூரில்...

ஜன்னல் ஓரத்தில் நான் நினைவு கனவுகளாய்...
என் விழியின் வழியே விரைவதை விவரிக்கிறேன்...
மாரி மாறி மாறி பொழிந்து விடிந்த காலை.,.விவசாயி மகனாய் சிவா...பட்டி முழுதும் பசுமாடு பார்த்திட பல வேலையாளு
எல்லா வசதியிருந்தும் பள்ளியில்லை இவ்வூரில்...

மஞ்சள் முகம் ஜொலிஜொலிக்க மங்கை ஒருத்தி பூங்கோதை...
பாலிய தோழி சிவாவுக்கு...
பூப்பெய்து நின்றால் முன்நாளே!
நிழல் கண்டவன் திரும்ப கீழிருந்து மேலாய் அவளை நோக்க
அவளும் எதிர்கொண்டு முடியாமல் தலைசாய்த்தால்
நெற்கதிர் போலே காலால் தரையை கோத எல்லாம் கோலாமாய் மாற கும்மென்று இருக்க இரு கோடு இதழ்கள் சிவந்திருக்க ...
உடுக்கை இடையவள் இருகால்கள் இளவாழைத்தண்டு
கழுத்து நேர்குத்து மூக்கு வகிடெடுத்து மயிலிறகு புருவமிரண்டு மூன்றாம் பிறை நெற்றி நட்சத்திரம் ஒன்றை ஒட்டி! வைத்தது போல் திலகமிட்டு கார்முகிலை அருவிகளாய் கூந்தல் நடந்தால் பின்புடம் தாலாட்டும் முன்பு ஏதோ புதிதாய் ...நான் அரிதாய் அன்றவளை பார்த்தது போல் முன்பொருநாளும் பார்த்ததில்லை...அவளை வர்ணிக்க வார்த்தைகள் தெரியவில்லை அவளும் எனை தவறாய் நினைக்க வில்லை...

மெதுவாய் நடந்து தென்றலாய் என் அருகே நெருங்கி ...
ஏய்! சிவா ...சி...வா.
சிவாஅஅஅ...(மெதுவாய் விழித்தது போல்)
ம்வு...வூ..வு ...யேய் கோதை ..!
என்னாடா ஆச்சி உனக்கு ..
ஒன்னுமில்லையே...ஏன்! ஏ...ன் அப்படி கேட்ட
ஏன்டா! நான் வந்து...எவ்வளவு நேரம் நிக்கிறேன்...என்னடா வாசலை பார்த்துகிட்டே கனவு காணுற...(அவளை மெய்மறந்து பார்தேனா சொல்லவா முடியும்)
அப்படியெல்லாம் ஒன்னுமில்லையே (சமாளிப்பு)
ஏன்டா நான் கூப்பிட்டது கூட காதில் விழல!
அதெல்லாம் ஒன்னுமில்லை...கூப்பிட்டியா ...சரி விடு வந்து உட்கார் வாத்தி வரும் நேரமாச்சி (அது இருபாலர் பள்ளி)
எட்டாம் வகுப்பில் இருவரும்...
அது நாள் வரை...
இருவரும் ஓடிப்பிடித்து விளையாடியதுண்டு
என் முதுகில் அவளும் அவள் முதுகில் நானும்
ஒருவர்க்கொருவர் உப்பு தூக்கி சுமந்ததுண்டு
இன்று...
பாவடை சட்டை தொலைத்து தாவனியில் வந்து நின்று
மனதை தடுமாறச் செய்து விட்டாய்...
உன் பாவடை நான் பிடித்திழுக்க பலமுறை தடுமாறி நீ விழுவாய்
இன்று ...என்னை தடம்மாறி விழவைத்தாய்...
உன் மேனிமேல் பலமுறை படர்ந்திருக்கேன் விளையாடும் போது அப்போதெல்லாம் கூட இந்த மாற்றம் வரவில்லை ....
டீர்...ர்..ர்...ர்...ர்...
பள்ளி மணி ஒலித்தது....
(தொடரும்...)

எழுதியவர் : கனகரத்தினம் (9-Mar-14, 10:02 pm)
சேர்த்தது : கனகரத்தினம்
பார்வை : 184

மேலே