மதங்கள் மறந்து ஒன்றுபடுவோம்

மதம் மனிதனை பிடித்தது
மனிதனுக்கு மதம் பிடித்தது
பிறகு பார்த்தால் மனிதனுக்கு
மனிதனையே பிடிக்கவில்லை

மதம் பிடித்து மனிதர்களை
கொன்றது யானை
எந்த மதம் என்று தான்
எவருக்குமே தெரியவில்லை

கீதையில் உள்ளதெல்லாம்
வெறும் கிறுக்கலாய் ஆனது
கோயில் மணி கூட ஏதோ
கேலிக் கூத்தாய் ஆனது

நபிகள் (ஸல்) கூறியதெல்லாம்
முகவரி அறுந்து போகுது
இன்றைய இளசுகள் எல்லாம்
இஸ்லாத்தை மறந்து தூரம் போகுது

இயேசு சிலுவையை சுமக்க
மனித பாவமோ மலையளவு குவிய
கிறிஸ்தவத்தின் இன்றைய நிலை
கிழித்து வீசிய காகிதமாய்

புத்தர் சொன்னது புதுமை ஆச்சு
போதி மரமோ ஈரமிழந்து போச்சு
பௌத்தம் என்பதே இன்று காவி
உடைக்கே உரியதாய் ஆச்சு

மதங்கள் என்பதே வெறும்
போதையாய் போச்சு
மனிதநேயம் கடையில் விற்கும்
சரக்காய் போயாச்சு

மத வெறிகளை களைவோம்
மதங்கள் போதிக்கின்ற மனிதநேயம்
பேனுவோம் - அனைவரும் ஒரு
குடையின் கீழ் ஒன்று படுவோம்

எழுதியவர் : எம். ஏ. அஷ்ரப் ஹான் (9-Mar-14, 10:05 pm)
பார்வை : 604

மேலே