என் உலகம்

சட்டேன விழிப்பு வந்தது...
ஜன்னலை திறந்தேன்..

எனக்கான உலகம் சின்னதாய் இருந்தது
ஜன்னல்களை உடைத்தெறிந்தேன்...

கதவு வழியே எனக்கான உலகம்...
கதவினையும் உடைத்தெறிந்தேன்..

சுவற்றின் அளவே எனக்கான உலகம்..
சுவறினை உடைத்தெறிந்தேன்...

இந்த உலகம் பரந்துவிரிந்து
இருந்தது....

நான் தேசாந்திரி... இந்த
உலகம் எனக்கு சொந்தம்...எனக்கான
உலகம் பெரியது...

வாருங்களேன்.. சேர்ந்து ரசிக்கலாம்...

எழுதியவர் : கவிதை தாகம் (11-Mar-14, 10:04 am)
Tanglish : en ulakam
பார்வை : 70

மேலே