மடியோட தவழ வேண்டிய குழந்தை என் தோழமையின் கவி

மடியோட தவழ வேண்டிய குழந்தை
மார்போட துவண்டு கிடக்குது
மறத்து போக மறுத்து நிக்குற மனசும்
மண்டி போட்டு மனம் இறங்க வேண்டுது
மாயம் செய்திடுமா கடவுள் என்று
பிஞ்சு பேச வேண்டிய மழலை மொழியும் தான்
கெஞ்சி பேசி பசுமரத்து ஆணியா இருக பதிஞ்சிடுதே!
மிஞ்ச வழியில்லைன்னு மிச்ச மருந்த கொடுக்க சொன்னதும்
அஞ்சி நடுங்கி வாட்டி வதைக்கி எடுக்குது
நஞ்சி நூளா போன நினைப்பு மொத்தமும்
தளர வைக்கும் தன்னம்பிக்கைகளை
தாரலமாக்கும் சொந்தங்களில் இருந்து
தனித்து இருக்க வைத்தும்
தவிக்கவிடாத மனது
தாகராறு செய்திடுதே
பத்து மாதம் சுமந்த பிள்ளைன்னு
பட்டு மெத்தையில போட்டு வளர்த்தாலும்
பத்து வருஷமும் படுத்த படுக்கையில இருக்குறதால
பட்டு படாமல் தான் வாழ்க்கை போகுது
படுற வேதனைய பார்க்கும் போது.

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (12-Mar-14, 11:32 am)
பார்வை : 83

மேலே