சிந்தனை செய்வீர்

தலைகவசம் தவிர்த்து
தலைகள் தொலைத்து
நட்டாற்றில் சிக்கிய-குடும்பங்கள் பல...
சிந்தனை செய்வீர்!!!

தூக்கி வீசப்படும்
விஷம மட்காப்பைகள்,e-வேஸ்ட், பிளாஸ்டிக்
போன்றவையால் மறுசுழர்ச்சி செய்யாமலே
மண்ணோடு நம் நலத்தையும்
சேர்த்து தூக்கிலிடும்-குப்பைகள் பல
சிந்தனை செய்வீர்!!!

ரப்பர் கையுறை & காலணியில்லாமல்
மின்கசிவால்-இரையானோர் பல
சிந்தனை செய்வீர்!!!

ஒரு நொடி கவனசிதறல்
பல குடும்பங்களை
சோகத்தில் ஆழ்த்திவிடும் எமன்-கைபேசி
பயணித்தின் போது கைபேசியை தவீர்பீர்
சிந்தனை செய்வீர்!!!

மாசி பனிபோல் மாசு நிறைந்து,
வானம் பார்த்த பூமியாய்
மாறிவரும் மரப்பற்றாக்குறையை
சிந்தனை செய்வீர்!!!

மரமின்றி மனிதனேது?
காற்றிண்டி உலகமும் ஏது?
அத்தகைய அற்புத வளத்தை
எரித்தல்/ புகைத்தல்/எரிபொருளை
வீணாக வீணாக்குவதால்
பின் வரும் சந்ததியினர் தவிப்பர்
சிந்தனை செய்வீர்!!!

தன்னைத்தான் காத்தால்- தற்காப்பு
தன்னோடு பிறர் நலம் காத்தால்-அகழ்காப்பு
விபத்தை தவிர்க்க
வியர்வைகள் சிந்த வேண்டாம்
சிறு முன் எச்சிரிக்கை போதும்...
சிந்தனை செய்வீர்!!!

மெக்சிகோ-பெய்ஜின்க் விமான விபத்து
என்று தொடங்கி
உலக கோப்பை விளையாட்டு வரை
சிறு தவறுகளே
வரலாற்றின் இழப்புகளில்
இடம் பெறுகின்றன...
சிந்தனை செய்வீர்!!!

உன்னை நீ பாதுகாத்தால்
உன் வீடும்
உன் வீட்டால் நாடும்
நம் நாட்டால் உலகமும்
நலமாய் வாழ்ந்திட
பாதுகாப்பே "காப்பாய்" -அணிவீர்
அழிவை தவீர்பீர்

எச்சரிக்கை/முன்- எச்சரிக்கை
தற்காப்பு/பாதுகாப்பு
சிந்தித்து செயல்படு/மிகுந்த கவனம்
ஜாக்கிரதை-என பல பெயர்களால் நாம் அறிந்தாளும்
பயன் ஒன்றே -நம் வாழ்க்கை நம் கையில்
சிந்தனை செய்வீர்!!!

தண்ணீரையும் சல்லடையால்
நிறப்பலாம்-முன் யோசைனையோடு
அதனை குளிரச்செய்தால்(பௌத்தம் பழமொழி )
சிந்தீப்பீர் செயல்படுவீர்
விபத்தில்லா உலகம் படைப்போம்....
சிந்தனை செய்வீர்!!!
-பரமகுரு கந்தசாமி

எழுதியவர் : பரமகுரு கந்தசாமி (12-Mar-14, 11:35 am)
சேர்த்தது : Paramaguru
Tanglish : sinthanai seiveer
பார்வை : 1031

மேலே