பெண்மையின் மேன்மை

சக்திக்கும் சிவத்திற்கும் இடமும் வலமும் - உலகில்
சமைத்தவர்கள் முன்னோர்கள் பேதம்இல்லை!

பெண்மைக்குப் பேர்பாதி உடலைத் தந்து - அவள்மேல்;
பேயனவன் கொண்டிருக்கும் பித்தந்தன்னை;
மண்ணுலகில் பெண்மையின்றேல் ஏதுமில்லை - என்று; மக்களுக்குச் சொல்வதற்குக் கூசவில்லை!

சக்தியவள் தன்வலத்தைச் சிவத்திற் காகச்
சரிபாதி தந்தாளா அன்றிச் சிவனும்
சக்திக்கும் தன்இடத்தைத் தந்துநின்று
சக்திசிவம் ஒன்றுஎன்று நிலைத்திட்டானா?

அவ்வரிய தத்துவத்தைக் கொண்ட நாமோ - பெண்ணை; அருவறுக்கத் தக்கவிதி செய்து வதைத்தோம்!
பெண்மையென்ற பெருஞ்செல்வம் பெறுவதற்கு - நாமும்; பெரும்பேறு செய்தேதான் பிறக்க வேண்டும்!

-------------சித்திரைச் சந்திரன்.

எழுதியவர் : செல்வப் ப்ரியா (சித்திரைச (12-Mar-14, 2:52 pm)
பார்வை : 351

மேலே